சமந்தாவின் கீழ்த்தரமான செயலால் பூஜா ஹெக்டேவிற்கு குவியும் ஆதரவு!

சனி, 30 மே 2020 (08:25 IST)
கடந்த சில நாட்களாகவே அஜித் - விஜய் போன்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வதுபோல் நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். காரணம் அந்தந்த நடிகைகளே வைத்துக்கொண்ட வினை தான். ஆம் சில தினங்களுக்கு முன்னர் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் "சமந்தா அப்படி ஒன்றும் அழகில்லையே" என கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது.

இதையடுத்து அந்த ஸ்டேட்டஸ் தான் போட்டதில்லை என்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்ய்யப்பட்டுவிட்டதாக கூறிய பூஜா ஹெக்டே டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்து போடப்பட்ட அந்த பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டுள்ளார்.

அந்த பதிவில் கமெண்ட் அடித்து பேசிக்கொண்ட நடிகை சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி ஆகிய மூவரும்  பூஜா ஹெக்டேவை குறித்து கிண்டலும் கேலியுமாக பேசிகொண்டுள்ளனர். இது சமந்தா ரசிகர்களிடையே பெரிய அதிருப்திக்குள்ளாகியுள்ளது. மேலும் பூஜா ஹெக்டேவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது. #WesupportPoojaHegde என ஹேஸ்டேக் உருவாகி சின்மயி, சமந்தாவின் கீழ்த்தரமான செயலை அனைவரும் கண்டித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் செம ஜாலியாக டான்ஸ் ஆடும் மஹத் - பிராச்சி: கலக்கல் கல்யாண வீடியோ!