ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கிய ’சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளதாக செய்திகள் வெளியானது
’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் அதில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அளிக்க உள்ளதாகவும் சமீபத்தில் ராகவாலாரன்ஸ் கூறியதற்குப் பின்னரே இந்த படம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில்ரஜினிகாந்த் மனநல மருத்துவர் சரவணன் கேரக்டரிலும், ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளனர். மேலும் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவை மீண்டும் சந்திரமுகி கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர் சம்பளம் மிக அதிகமாக கேட்டதாகவும் இதனையடுத்து அவர் இந்த படத்தில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக சந்திரமுகி கேரக்டரில் சிம்ரன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
முன்னதாக சந்திரமுகி முதல் பாகத்தில் முதலில் சந்திரமுகி கேரக்டரில் நடிக்க சிம்ரன் தான் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும், ஆனால் திடீரென சிம்ரன் கர்ப்பம் ஆனதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் அதன் பின்னரே ஜோதிகா இந்த படத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மிஸ் செய்த வாய்ப்பை தற்போது இரண்டாம் பாகத்தில் சிம்ரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது