Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கும் படம் அறிவிப்பு!

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கும் படம் அறிவிப்பு!
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:07 IST)
பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கும் படம் அறிவிப்பு!
இயக்குனர் இமயம் பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் சக்கரவர்த்தி என்பது தெரிந்ததே. அதன் பின் ஒரு சில படங்கள் நடித்த சுரேஷ்,  ஆஸ்திரேலியா சென்று விட்டார் என்பதும் அங்கு அவர் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வந்தார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமான சுரேஷ், தற்போது அவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் 
 
ஏற்கனவே விஷால் நடித்து வரும் ’துப்பறிவாளன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஷாரா, ஜேஎஸ்கே சதீஷ்குமார் உள்பட பலர் நடிக்க உள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் குட்டப்பா டீசர் ரிலீஸ்!