Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பு நிறைவு

பிக்பாஸ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பு நிறைவு
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
பிக்பாஸ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பு நிறைவு
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்தாவது சீசன் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்கான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ படப்பிடிப்பு நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புரோமோ வீடியோ விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் காரைக்குடி சென்றுள்ளார் என்பதும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவுக்கு வில்லனாகும் விதார்த்… பின்னணி என்ன?