இந்தியாவில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு வெடிக்க ஆரவமுடம் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடி உற்பத்தி செய்யவோ, விற்கவோ வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாவது:
தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் இதற்குப் போலீசார் பொறுப்பேற்க வேண்டும். பேரியம், நைட்ரேட் மூலம் தயாரிக்கவும், விற்கவும் வெடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் பசுமை பட்டாசுகளை விற்கும் உற்பத்தியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும், இந்த உத்தரவை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.