தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி.
இப்படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இல்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முந்தைய விசாரணையில் சட்டப்படி அமைப்பட்ட குழுவின் மூலம் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசு மற்றும் சென்சார் போர்டு கூறியது. இந்நிலையில் இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகையிலைப் பயன்பாட்டல் ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் ரூ.13,500 கோடி செலவு செய்யப்படுவதாக குறிப்பிட்டு இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.