சன்னி லியோன் இந்திய மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் தமிழில் ஒப்பந்தமான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட்டில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வரும் அவர் “என் பாடல்களின் ஷூட்டிங்கின் போது குழந்தைகள் இருக்கக் கூடாது என்று சொல்லிவிடுவேன். குழந்தைகள் இருந்தால் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்