Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Advertiesment
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:47 IST)
ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்தடுத்து பிசாசு 2 மற்றும் அனல் மேலே பனித்துளி போன்ற படங்கள் ரிலீஸாக உள்ளன.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் அனல் மேலே பனித்துளி படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமாக மாடர்ன் உடைகளில் தோன்றும் ஆண்ட்ரியா பச்சை நிற சேலையில் இருக்கும் அந்த புகைப்படம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் தாண்டியும் கிளை பரப்பும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்!