Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அரண்மனை 3’ படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'அரண்மனை 3’ படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 15 செப்டம்பர் 2021 (17:53 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ’அரண்மனை 3’திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆர்யா, சுந்தர் சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு, கோவை சரளா, மனோபாலா காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சோனு சூட் வீட்டில் ஐடி ரெய்ட்