Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர் சி … இயக்குனர் யார் தெரியுமா?

Advertiesment
கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர் சி … இயக்குனர் யார் தெரியுமா?
, புதன், 2 செப்டம்பர் 2020 (17:20 IST)
சுந்தர் சி கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாயாபஜார் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சுந்தர் சி. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல் தனது பெரும்பாலான படங்கள் ஏதாவது வேறு மொழி படங்களின் ரீமேக் அல்லது தழுவலாக இருக்கும். அதனால் குறைந்த பட்ச வெற்றி அவர் படத்தில் உறுதியாகி விடுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாயாபஜார் எனும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஆனால் அந்த படத்தை அவர் ரீமேக் செய்யாமல் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தை அவரது உதவியாளர் இயக்குவார் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்... வானில் பறந்து பிரம்மிப்பூட்டும் சம்யுக்தா ஹெக்டே