Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.பிபி உடல்நலம் குறித்து எஸ்.பி.பி.சரணின் லேட்டஸ்ட் தகவல்

Advertiesment
எஸ்.பிபி உடல்நலம் குறித்து எஸ்.பி.பி.சரணின் லேட்டஸ்ட் தகவல்
, புதன், 2 செப்டம்பர் 2020 (16:24 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்தாலும் தற்போது அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது 
 
மேலும் அவர் சமீபத்தில் கண்விழித்து தனது மகன், மகள், உள்ளிட்டோர்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்தது
 
மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி சரண் அவர்களும் தினசரி அப்டேட்களை கொடுத்து வந்தனர். இதிலிருந்து எஸ்பிபி அவர்கள் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தார் என்பது தெரிய வந்தது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தையின் உடல் நிலை குறித்து எஸ்பிபி சரண் குறிப்பிட்ட போது, ‘எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை முன்னேற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோடிக்கணக்கான இசை இரசிகர்கள் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்... எச்சரிக்கும் வைரமுத்து!