Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இணையும் சுந்தர் சி & விஷால் கூட்டணி!

vinoth
திங்கள், 27 ஜனவரி 2025 (14:33 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவ பொங்கலுக்கு ரிலீஸான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா முதலிடம் பிடித்தது. 12 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கலக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றியை அறுவடை செய்யும் பொருட்டு மீண்டும் சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி முடித்ததும் உடனடியாக இந்த படம் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை இந்த படம் உருவானால் சுந்தர் சி விஷால் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments