நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த புஷ்பா 2. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது. இந்திய அளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தப் படமாக அமைந்தது.
இதையடுத்து புஷ்பா 3 படம் விரைவில் உருவாகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக சுகுமாரின் அடுத்த படம் என்னவென்பது குறித்த எந்த அப்டேட்டும் இல்லை. அவர் ஷாருக் கானுக்குக் கதை சொல்லியுள்ளதாக ஒரு தகவல் பரவியது. அதே போல ராம்சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது சுகுமார் தன்னுடைய அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படத்தைத் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் தில் ராஜு பிரபாஸ் மற்றும் சுகுமார் ஆகிய இருவரையும் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.