நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த புஷ்பா 2. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது. இந்திய அளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தப் படமாக அமைந்தது.
புஷ்பா 2 உருவாக்கத்தின் போதே அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த படத்தில் 40 சதவீதக் காட்சிகளைத் தான் இயக்கவில்லை என சுகுமார் அறிவித்தார். அவருடைய இணை இயக்குனர்தான் இயக்கினார் என அறிவித்தார்.
இந்நிலையில் புஷ்பா படம் பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவலை அவர் பகிர்ந்துள்ளார். அதில் “புஷ்பா படத்தை நான் வெப் சீரிஸாகதான் இயக்க ஆசைப்பட்டேன். இது சம்மந்தமாக நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சில கடத்தல்காரர்களை சந்தித்தேன். அதில் ஒருவரின் பெயர்தான் புஷ்பராஜ். அந்த பெயர் என்னை ஈர்த்தது. அந்த இடத்தில் இருந்துதான் புஷ்பா திரைப்படம் உருவானது” எனக் கூறியுள்ளார்.