Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரை விவாகரத்து செய்கிறாரா சுப்ரமண்யபுரம் ஸ்வாதி? அவரே அளித்த பதில்!

Advertiesment
திருமணம்
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (14:53 IST)
சுப்ரமண்யம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகியவர் ஸ்வாதி. அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. இப்போது வரை அவர் சுப்ரமண்யபுரம் ஸ்வாதி என்றுதான் அறியப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பின்னர் அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். இதற்கிடையில் இப்போது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்வாதியிடம் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்வாதி “இது சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி. இதில் ஏன் சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்கிறீர்கள். அதனால் இந்த பர்சனல் கேள்விக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நீரைச் சேமிக்க இனியாவது நாம் பழகவேண்டும்..” காவிரி பிரச்சனையில் சுரேஷ் காமாட்சி ஆதங்க பதிவு!