தமிழ் சினிமாவின் பிரபல நடிகை திரிஷா. இவர், கமல், விஜய், அஜித், சிம்பு, விஷால், ஜெயம்ரவி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய பாகங்களில் முக்கிய வேடத்தில் நடித்டிருந்தார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகை திரிஷா பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், இரு வீட்டுக் குடும்பத்தினரும் பேசி முடிவெடித்துவிட்டதாகவும், விரைவில் இதுபற்றி அறிவிப்புகள் வெளியாகும் என சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.