Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:04 IST)
தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இளன். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கவினை வைத்து அவர் இயக்கிய ‘ஸ்டார்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஹரிஷ் கல்யாண்தான். அவரை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுக்கப்பட்டு போஸ்டர்கள் ரிலீஸாகி இருந்தன. அந்த போஸ்டர்களில் அவர் ரஜினி கமல் விஜய் அஜித் கெட்டப்களில் காணப்பட்டார். இடையில் கொரோனா தொற்றுப் பரவலால் அந்த திரைப்படம் தாமதம் ஆனது.  அதனால் ஹரிஷ் கல்யாணுக்குப் பதில் கவின் நடிக்க இந்த படம் உருவானது.

இந்நிலையில் இப்பொது இளன் தன்னுடைய மூன்றாவது படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தை அவர் இயக்குவதோடு அவரேக் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

வைரமுத்துவைக் கேள்வி கேட்கும் கங்கை அமரன் SPB சரண் விஷயத்தில் அமைதியாக இருந்தது ஏன்?- நெட்டிசன்ஸ் கேள்வி!

உலக சினிமா: ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகத்தின் டிரைலர் ரிலீஸ்!

ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments