Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

Advertiesment
லோகேஷ் கனகராஜ்

Siva

, செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (18:42 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
 
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக உயர்ந்துள்ள லோகேஷ், தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.
 
தற்போது அவர் இயக்கும் புதிய திரைப்படம் "கூலி", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது தொழில்நுட்ப வேலைகள் முழுசாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டதால், விளம்பர பணிகளும் தொடங்க உள்ளன.
 
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில், “சமூக வலைதளங்களிலிருந்து  இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். ‘கூலி’ ப்ரமோஷன்  வரை இணையத்தில் இருக்க மாட்டேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இது அவரது தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் இதை புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!