இயக்குனர் நலன் குமாரசாமி பட வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையில், கார்த்தி அவரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்ததற்கு தற்போது சரியான நேரத்தில் படத்தை முடிக்காமல், இயக்குனர் கடுப்பு ஏற்றி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு "சூது கவ்வும்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. அதன் பின்னர் அவர் இயக்கிய ஒரே படம் "காதலும் கடந்து போகும்" என்ற படமும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது தான் அவருக்கு கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியாரே" என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 160 நாட்கள் நடந்து விட்ட போதிலும், இன்னும் 20 நாள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும், கார்த்தி கால்ஷீட் தரவேண்டும் என்றும் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்தி இதுவரை நடித்த படங்களில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தது "காஷ்மோரா" படம் தான். ஆனால் அதைவிட அதிகமாக படப்பிடிப்பு நடைபெறும் இப்படம் இன்னும் முடியவில்லை என்ற தகவல், கார்த்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் படியாக இருக்கிறது.
படமே இல்லாமல் வீட்டில் இருந்தவரை கூப்பிட்டு படம் கொடுத்தால் இப்படி கடுப்பேற்றுகிறாரே என தனக்கு நெருக்கமானவர்களிடம் கார்த்தி புலம்பி வருவதாகவும், "சர்தார் 2" முடியும் வரை இப்போதைக்கு தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்று அவர் கூறிவிட்டதால், இந்த ஆண்டு கூட அந்த படம் ரிலீஸ் ஆவது சிரமம் என்றும் கூறப்பட்டுள்ளது.