Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொக்க சீரிஸயே பார்ட் 2 எடுப்போம்… இத விடுவோமா? களத்தில் இறங்கிய நெட்பிளிக்ஸ்!

Advertiesment
மொக்க சீரிஸயே பார்ட் 2 எடுப்போம்… இத விடுவோமா? களத்தில் இறங்கிய நெட்பிளிக்ஸ்!
, சனி, 23 அக்டோபர் 2021 (12:00 IST)
நெட்பிளிக்ஸில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸ் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.

கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இப்போது நெட்பிளிக்ஸ் இறங்கிவிட்டது. இது ஸ்க்விட் கேம்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சுதா சந்திரனின் செயற்கைக்காளை சோதித்த விவகாரம்! மன்னிப்பு கேட்ட சிஐஎஸ்எஃப்!