மேற்கு வங்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று இப்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைக்குப் பின்னர் எல்லா மாநிலங்களிலும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கும் ஓரளவு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களின் காரணமாகவே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அரசு அறிவித்த விதிமுறைகளை பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கவே இல்லை.