இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான கொளகையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பல நாடுகள் அவற்றில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன. இந்நிலையில் இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் இந்த தடுப்பூசி இந்திய மக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும் என்று ராகுல்காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக ‘விரைவில் இந்தியா கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக மாறும். அதனால் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை முடிவை வடிவமைத்து அறிவிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.