ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.
தற்போது அவர் May 6th Entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வெப் சீரிஸ்களைத் தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரித்த கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற வெப் சீரிஸ் பாதியிலேயேக் கைவிடப்பட்டது. அதையடுத்து தற்போது “#Love” என்ற வெப்சீரிஸைத் தயாரித்து வருகிறார்.
இந்த வெப் சீரிஸில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் மையக் கதாபாத்திரங்களில் நடிக்க பாலாஜி மோகன் இயக்குகிறார். விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இந்த சீரிஸின் முதல்லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது.