சூரியின் ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் லப்பர் பந்து பட நடிகைக்குக் காயம்!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (15:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சியின் போது ஸ்வாசிகாவின் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்புப் பாதிக்கப்பட பின்னர் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு காட்சிகளை முடித்துக் கொடுத்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments