களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில்தான் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த போகுமிடம் வெகுதூரமில்லை மற்றும் சார் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இந்நிலையில் விமல் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி ரிலீஸாகாமல் இருந்த படவா என்ற திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படவா திரைப்படத்தில் விமல் மற்றும் சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கே வி நந்தா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரித்து இசையமைத்துள்ளார். சமீபத்தில் விஷாலின் மத கஜ ராஜா 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலிஸாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது பழைய படங்கள் எல்லாம் தூசு தட்டப்படுகின்றன. அந்த வரிசையில் படவா திரைப்படமும் இணைந்துள்ளது.