தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.
அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சியின் போது ஸ்வாசிகாவின் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்புப் பாதிக்கப்பட பின்னர் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு காட்சிகளை முடித்துக் கொடுத்தாராம்.