பிரபல நடிகரின் உதவியால் மாஸ்கோவில் இருந்து சென்னை திரும்பிய தமிழ் மாணவர்கள்
இந்த குரானா விடுமுறை காலத்தில் நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது சுமார் 100 தமிழ் மாணவர்கள் மாஸ்கோவில் இருந்து சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியானது
பிரபல நடிகரின் உதவியால் மாஸ்கோவில் இருந்து சென்னை திரும்பிய தமிழ் மாணவர்கள்
இந்த செய்தியை அடுத்து ரஷ்ய அரசுடன் பேசி தனி விமானத்தை ஏற்பாடு செய்தார் நடிகர் சோனு சூட். இந்த தனி விமானம் தமிழ் மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்னைக்கு பத்திரமாக தரையிறங்கியது
இதனை அடுத்து தாயகம் திரும்பிய தமிழ் மாணவர்கள் சோனு சூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தமிழ் மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தனது சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்த சோனு சூட் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது