Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கமான மனசு கொண்ட வில்லன் நீங்க! – ட்ரெண்டாகும் சோனு சூட் பிறந்தநாள்!

Advertiesment
தங்கமான மனசு கொண்ட வில்லன் நீங்க! – ட்ரெண்டாகும் சோனு சூட் பிறந்தநாள்!
, வியாழன், 30 ஜூலை 2020 (10:47 IST)
சினிமாவில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் மக்களிடம் புகழ்பெற்றுள்ள நடிகட் சோனு சூட்டின் பிறந்தநாள் ட்ரெண்டாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக அறியப்படுபவர் சோனு சூட். பாலிவுட்டில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஒஸ்தி, அருந்ததி போன்ற படங்களின் மூலம் வில்லன் நடிகராக அறியப்படுகிறார்.

படங்களில் மோசமான வில்லனாக இருந்தாலும் உண்மை வாழ்க்கையில் எல்லாரையும் விட பெரிய ஹீரோவாக மாறியுள்ளார் சோனு சூட். முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் செல்ல சிறப்பு விமானங்கள், பேருந்துகள் ஏற்படுத்தி கொடுத்தது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்தது என சமீப காலத்தில் மக்களுக்கு செய்த உதவியால் தொடர்ந்து மக்களிடையே பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
webdunia

இன்று அவரது பிறந்தநாளையொட்டி பலர் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தங்கமான இதயம் கொண்டவர் என பொருள்படும்படி "Man With Golden Heart" என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் அவர் மக்களுக்கு செய்த உதவிகளை வர்ணித்து போஸ்டர் வெளியிட்டும் வாழ்த்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியா அப்ஸ்காண்ட்: சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடர்பா?