Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவர்களுக்கு உதவுங்களேன்! ”இனிமே அவங்க என் குழந்தைங்க!” – ஆதரவளித்த சோனு சூட்!

Advertiesment
இவர்களுக்கு உதவுங்களேன்! ”இனிமே அவங்க என் குழந்தைங்க!” – ஆதரவளித்த சோனு சூட்!
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (11:43 IST)
சமீப காலமாக சமூக சேவைகளால் மக்களின் மனதில் நாயகனாக நின்றுள்ள சோனு சூர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ள சம்பவம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படங்களில் வில்லனாய் நடித்தாலும் நிஜ வாழ்வில் மக்கள் மனதில் ஹீரோவாக மாறியுள்ளவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது, காய்கறி விற்ற ஏழை பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தது. விவாசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்து உதவியது என இவரது செயல்கள் சமீப காலமாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு, அனாதையான அந்த குழந்தைகளுக்கு யாரவது இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள சோனு சூட் “அவர்கள் நீண்ட காலம் அனாதையாக இருக்க போவதில்லை, இனி அவர்கள் என் பொறுப்பில் வளர்வார்கள்” என பதிலளித்துள்ளார்.

உதவி என கேட்காமலே தேடி சென்று உதவும் சோனு சூட்டிற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!