Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை படப்பிடிப்பில் விபத்து: அஜீத்துக்கு காயம்?

வலிமை படப்பிடிப்பில் விபத்து: அஜீத்துக்கு காயம்?
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (07:42 IST)
வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு நடைபெற்றபோது அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து அவர் ஒரு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு படப்பிடிப்பை முடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் அஜித்துக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என்றும் இதனால் அஜித் ரசிகர்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் படக்குழுவினர் ஆறுதலுடன் கூறியுள்ளனர். ஏற்கனவே அஜீத் ஒருசில படப்பிடிப்பின்போது பல விபத்துகளை சந்தித்து ஒருசில அறுவை சிகிச்சைகளும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் வெளியிட்ட விதார்த் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...