Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேஜிஎப் படத்தில் சஞ்சய் தத் காட்சிகள் படப்பிடிப்புகள் எப்போது? வெளியான தகவல்!

கேஜிஎப் படத்தில் சஞ்சய் தத் காட்சிகள் படப்பிடிப்புகள் எப்போது? வெளியான தகவல்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (11:06 IST)
நடிகர் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கும் காட்சிகள் டிசம்பர் மாதம் படம்பிடிக்கப் பட உள்ளது.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் 2 படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் முதல் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். பின்னர் இப்போது மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து அவர் சில படங்களின் படப்பிடிப்புகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேஜிஎப் படத்தின் படப்பிடிப்பில் டிசம்பர் மாதம் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் நடிக்கும் காட்சிகள் நவம்பர் மாதமே படம்பிடிக்கப்பட இருந்த நிலையில் இப்போது டிசம்பர் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஸ்வரனை தொடர்ந்து வரும் மாநாடு டீசர்! – அடுத்தடுத்து அப்டேட்டால் தெறிக்க விடும் எஸ்டிஆர்!