நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (08:33 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிப்பில் அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தற்போது தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக உள்ளார்.

கடைசியாக அவர் இசை என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன்பிறகு இயக்கத்துக்கு ஒரு பெரிய இடைவெளியை விட்டார்.  இந்நிலையில் எஸ் ஜே சூர்யா தான் வெகு நாட்களாக இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட கில்லர் படத்தினை தற்போது தொடங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

படத்தை கோகுலம் மூவிஸ் கோபாலன் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இது சம்மந்தமாக தயாரிப்பாளரோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து எஸ் ஜே சூர்யா “கில்லர் படத்தின் அறிவிப்பு வெளியானதும் என் மேல் அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி. என்ன தவம் செய்தேன் இந்த அன்பிறகு. படம் பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும். நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை.” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments