Webdunia - Bharat's app for daily news and videos

Install App

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (08:22 IST)
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

அதே சமயத்தில் பாலா சினிமாவில் ஹீரோவாக ஆகவேண்டும் என்பதற்காகதான் இப்படி செய்யும் உதவிகளை பப்ளிசிட்டி பண்ணிக் கொள்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்களும் எழாமல் இல்லை. அதற்கேற்றார் போல நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், அதற்காக யாராவது நல்ல கதை வைத்திருந்தால் என்னை அணுகவும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments