DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (11:21 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்த உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக  நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடங்கியது. படத்துக்கு ‘DC (தேவதாஸ்-சந்திரா) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.

இந்நிலையில் இந்த படத்துக்காக லோகேஷ் வாங்கியுள்ள சம்பளம் பற்றிய ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்கவும், திரைக்கதையில் பங்காற்றியதற்காகவும் லோகேஷுக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலின் நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. என்னதான் வெற்றிகரமான இயக்குனராக லோகேஷ் இருந்தாலும் நடிகராக இது அவருக்கு முதல்படம். அதனால் அவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments