முற்றும் போட்ட பின்னரும் மீண்டும் தொடங்கும் ‘மதராஸி’ ஷூட்டிங்… காரணம் என்ன?

vinoth
செவ்வாய், 17 ஜூன் 2025 (11:40 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி படமாக அமைந்தது.

அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டன.  தற்போது அந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு பாடல் காட்சியை மீண்டும் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மேலும் சில ஷாட்கள் தேவைப்படுவதால் அதையும் திரும்ப ஷூட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments