Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்துக்கு வாழ்த்திய சிவகார்த்திகேயன் ! நெகிழ்ச்சி இயக்குநர்!!!

விஜய் படத்துக்கு  வாழ்த்திய சிவகார்த்திகேயன் ! நெகிழ்ச்சி இயக்குநர்!!!
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:59 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது 65 வது படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள நிலையில், இதற்காக அவரை வாழ்த்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 65 வது படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என்பது பெரும் எதிபார்ப்பை எழுப்பிய நிலையில், ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்கிரிப்ட் ஓகே ஆகாததால் விஜய் அவரை நிராகரித்தார்.

இந்நிலையில், விஜய்யின் 65 வது படத்தைத் தயாரிக்கவுள்ள சன்பிக்சர்ஸ் இன்று தனது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதில் நெல்சன் விஜய்யின் 65 வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் டாக்டர் படம் வெளியாகவுள்ளது. விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்கு நெல்சன் நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சினிமா இயக்குனர் கிம் கி டுக் காலமானார்! – ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!