விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	விஜய்யின் 65 ஆவது படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். அந்த படத்துக்கு அவரின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்க உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்த இரண்டு பாடல்களுமே ஹிட்டாகின. இந்நிலையில் அதை செண்ட்டிமெண்ட்டாக வைத்து இப்போது தளபதி 65  படத்திலும் அவர் பாடல் எழுதுவார் என சொல்லப்படுகிறது.