வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கட்பிரபு படம் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். தற்போது பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.