Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீஸ் தேதியை லாக் செய்த சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு!

vinoth

, வியாழன், 30 மே 2024 (08:02 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.

இதையடுத்து இப்போது படத்தின் பிஸ்னஸைப் படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் விடுமுறை நாட்கள் வருவதால் இந்த தேதியை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!