Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் அடுத்த பட போஸ்டரோடு வெளியான அப்டேட்!

சிவகார்த்திகேயனின் அடுத்த பட போஸ்டரோடு வெளியான அப்டேட்!
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:28 IST)
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்து வந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் காட்சிகளை எல்லாம் எடிட்டர் கட் செய்துவிட்டார்… மேடையில் புலம்பிய யோகி பாபு!