குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த அருண் வீரப்பன் என்பவர் காலமானதை அடுத்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி.
ஏவிஎம் நிறுவனத்தின் பல திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் அருண் வீரப்பன் பணிபுரிந்துள்ளார். மேலும் உன்னிடத்தில் நான்என்ற படத்தை அவர் இயக்கி உள்ளார் என்பதும் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
90 வயதான அருண் வீரப்பன் வயது முதிர்வு காரணமாக நேற்று அவரது மயிலாப்பூர் இல்லத்தில் காலமானார்