Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயலான் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!

அயலான் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இப்போது இசைப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேசன் விஜய் - லைகா திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவா? கோலிவுட்டில் பரபரப்பு..!