Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ டைட்டில் வைக்கக் கூடாது… சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!

Advertiesment
சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ டைட்டில் வைக்கக் கூடாது… சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!

vinoth

, திங்கள், 27 ஜனவரி 2025 (07:23 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1952 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் இன்றளவும்  பேசப்படும் அரசியல் சினிமாவாக உள்ளது. இந்நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் சம்மந்தப்பட்ட கதைக்கு அந்த தலைப்பை மீண்டும் பயன்படுத்த உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும்.

இந்நிலையில் சிவாஜி ரசிகர்கள் சமூகப் பேரவை அமைப்பு “சிவகார்த்திகேயன் படத்துக்கு பராசக்தி என்ற டைட்டிலை வைக்கக் கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முன்னதாக விக்ரம்மின் ‘தெய்வமகன்’ மற்றும் தனுஷின் ‘கர்ணன்’ ஆகிய படங்களுக்கும் இதே போல எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்ப்பால் படக்குழு தலைப்பை மாற்றுமா அல்லது அதே தலைப்பை வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்பார்.. மிஷ்கின் இதே வேலையாப் போச்சு– விஷால் காட்டம்!