Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபுவுக்கு அம்மாவாக சித்தாரா நடிக்கும் ‘சன்னிதானம் பி ஓ’!

Advertiesment
யோகி பாபுவுக்கு அம்மாவாக சித்தாரா நடிக்கும் ‘சன்னிதானம் பி ஓ’!
, சனி, 7 அக்டோபர் 2023 (10:55 IST)
யோகி பாபு சமீபத்தில் நடித்த லக்கிமேன் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த படம் ஜவான் படத்தோடு ரிலீஸ் ஆனதால் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை.

இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் பூமர் அங்கிள்’, ‘ஐகோர்ட் மகாராஜா’, ‘வானவன்’, மற்றும் ‘சட்னி சாம்பார்’ ஆகிய திரைப்படங்கள் உருவாக்கத்திலும் ரிலீஸுக்காகவும் காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கும் சன்னிதானம் பிஓ என்ற படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்துள்ளது. இயக்குனர் அமுதசாரதி இயக்கும் இந்த படத்தில் 90 களில் கதாநாயகியாக கலக்கிய நடிகை சித்தாரா யோகி பாபுவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அவர் நடிக்கும் படமாக இந்த படம் அமையவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தில் ஆபாச வார்த்தை.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!