Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தில் ஆபாச வார்த்தை.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!

Advertiesment
leo vijay
, சனி, 7 அக்டோபர் 2023 (10:50 IST)
லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. இந்த டிரைலரில் நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்றும், டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். 
 
லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 12 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரி ரிலீஸ் விழா… ஆனால் விஜய் கலந்துகொள்வாரா?