Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

Advertiesment
சிம்பு

Mahendran

, வியாழன், 19 ஜூன் 2025 (17:27 IST)
நடிகர் சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வரும் ஜூன் 25ஆம் தேதி அமாவாசை தினத்தில் வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வெற்றிமாறன் புரட்சியாளராகவும், சோசலிச கருத்துக்களைத் தனது படங்களில் புகுத்துபவராகவும் இருந்தாலும், செண்டிமெண்ட் விஷயத்தில் அவர் அமாவாசை தினத்தை தான் தேர்ந்தெடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்தப் ப்ரோமோ வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டு தயாராக இருப்பதாகவும், இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த படத்திற்கு 'ராஜன் வகையறா' என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருந்தாலும், அது எந்த அளவுக்கு உண்மை என்பது ஜூன் 25ஆம் தேதி இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகும் நாளில் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?