Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் ரகசியம் சிம்புக்கு தெரியும்! - கொளுத்தி போட்ட ஹாரிஷ் கல்யாண்!

Advertiesment
விஜய்யின் ரகசியம் சிம்புக்கு தெரியும்! - கொளுத்தி போட்ட ஹாரிஷ் கல்யாண்!
, சனி, 2 மார்ச் 2019 (18:16 IST)
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் விஜய்  பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்றுத்தந்துள்ளார். ஆனால் காதல் காவிய படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இதுவரை ஒரு படங்களில் கூட நடித்ததில்லை என்பது நமக்கு  தெரியும்.  ஆனால்,  நம்மில் பலரும் தெரியாத ஒரு ரகசியத்தை பிக் பாஸ் புகழ் ஹாரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். 


 
சிம்புவின் தீவிர ரசிகரான இவரிடம் சிம்புவை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேட்க அதற்கு ஹாரிஷ் கல்யாண் ஓ எஸ், கண்டிப்பாக எடுப்பேன். சொல்லப்போனால் ஒரு முறை நானும் அவரும் இது குறித்து பேசினோம்.  அப்போது நான் அவரிடம் நீங்கள் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் ஒரு த்ரில்லர் படம் நடிக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அவரை வைத்து நான் கண்டிப்பாக ஒரு திரில்லர் படத்தை எடுப்பேன். 
 
மேலும் அவருடைய கெட்டப் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவரை முற்றிலுமாக மாற்றி விஜய் ‘யோகன்’ போஸ்டரில் இருப்பது போல தளபதி ஸ்டைலில் புது சிம்புவை உருவாக்குவேன் என ஹாரிஷ் கலையாண்  கூறியுள்ளார்.

webdunia

 
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்  நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் "யோகன்" படம் உருவாக இருந்தது. ஆனால் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். கவுதம் மேனனோ, இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே விஜய்யிடம் கூறியுள்ளார். அதற்கு விஜய் 
இந்த படத்தின் முழு கதையை தயார் செய்துவிட்டு  பின்னர் சொல்லுங்கள் என்று கூறினாராம் ஆனால், கவுதம் மேனன் தாமதப்படுத்த அந்த படமே நின்றுவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு ’அந்த சக்தி ’கிடைத்தால் தீவிரவாதிகளை ஒழிப்பேன் : தமன்னா