Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி
, சனி, 10 ஜூலை 2021 (06:48 IST)
சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார் 
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் பணிகள் நிறைவு பெற்றதாகவும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மாநாடு படத்தை முடித்துள்ள சிம்பு அடுத்ததாக பத்து தல என்ற திரைப்படத்திலும் அதனை அடுத்து நதிகளிலே நீராடும் சூரியன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேபிள் டிவி மூலம் இனிமேல் ஓடிடி ..?