Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்து தணிந்தது காடு… தலைப்புப் பிரச்சனையை தீர்த்த ஐசரி கணேஷ்!

Advertiesment
வெந்து தணிந்தது காடு… தலைப்புப் பிரச்சனையை தீர்த்த ஐசரி கணேஷ்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:34 IST)
இயக்குனர் மதி சுதா இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரச்சனையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தீர்த்துள்ளாராம்.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் அதே பெயரில் ஈழத்தமிழரான மதி சுதா என்பவர் ஒரு படத்தை எடுத்து முடித்து வியாபார வேலைகளை எல்லாம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் பிஸ்னஸ் வேலைகள் பாதிக்கபப்ட்டுள்ளதாக புகார் கூறி வருகிறாராம். இணையத்திலும் அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. இந்த வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குனர் மதி சுதா என்பவர் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் என்பவரின் தம்பியாம்.

இந்நிலையில் இந்த தலைப்புப் பிரச்சனையை தீர்க்க ஐசரி கணேஷ் மதிசுதாவின் திரைப்படத்தின் வியாபாரத்துக்கு தானே உதவி செய்வதாக அறிவித்துள்ளாராம். இதனால் இப்போதைக்கு அதே தலைப்பில் இரண்டு படங்களும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டான் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? விதியை மீறிய படக்குழு!