Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உழைச்சாதான் பொழைக்க முடியும்… அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர்!

உழைச்சாதான் பொழைக்க முடியும்… அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர்!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:06 IST)
சின்னத்திரையில் புது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான ப்ரோமோ நிகழ்ச்சி படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரபலங்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாவலின் காப்பியா கிடார் கம்பி மேலே நின்று படம்? எழுத்தாளர் சந்தேகம்!